Offline
Menu
KLIA விமான நிலையத்தில் போதைப்பொருள் உட்கொண்ட இந்தோனேசிய நடிகர்
By Administrator
Published on 10/03/2026 17:00
News
RM2,300 அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி!

மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) சட்டவிரோதமாகப் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்ட இந்தோனேசிய நடிகரும் மாடலுமான சாமுதேரா ஹர்லி டெய்லருக்கு RM2,300 அபராதம் விதித்து சிப்பாங் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

 

24 வயதான அந்நடிகரின் பரிசோதனை அறிக்கையில் கஞ்சா சார்ந்த போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி கைராதுல் அனிமா ஜெலானி இத்தண்டனையை விதித்தார். RM2,300 அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 4 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

 

“கடந்த ஜூலை 28 அன்று KLIA விமான நிலைய கழிப்பறையில் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்தை எனது கட்சிக்காரர் ஒப்புக்கொண்டார். வழக்கு விசாரணைகள் மற்றும் குடிநுழைவுத் துறை நடைமுறைகள் முடிவடைந்து அபராதத் தொகையும் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புற்றுநோய் சிகிச்சைப் பெற்று வரும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அவர் உடனடியாக இந்தோனேசியா திரும்பியுள்ளதாக” அவரது வழக்கறிஞர் ஷா வீரா அப்துல் ஹலீம் கூறினார்.

 

கடந்த ஜூலை 27 அன்று KLIA புறப்பாடு நுழைவாயில் 4-இல் துணைப் போலிஸ் அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததற்காகவும், விமான நிலைய ஊழியர்களை வசைபாடியதற்காகவும் சாமுதேராவிற்கு ஏற்கனவே நீதிமன்றம் RM500 அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

போதைப்பொருள் சோதனையின் முடிவுகள் வரும் வரை மலேசியாவிலேயே தங்கியிருக்க உத்தரவிடப்பட்டிருந்த அவர், தற்போது அனைத்து அபராதங்களையும் செலுத்திவிட்டுத் தாய்நாடு திரும்பியுள்ளார்.

Comments