Offline
Menu
மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி
By Administrator
Published on 10/20/2026 14:00
News
மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள்

27ஆவது மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி 2026 நிகழ்ச்சியை முன்னிட்டு, மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி அமைப்பு நடத்திய நிதி திரட்டும் நிகழ்ச்சியின் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 19 கல்வி உதவித்தொகைகள் திரட்டப்பட்டுள்ளன. அரசு பலதொழில்நுட்பக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு உதவித்தொகையும் 3,600 ரிங்கிட் மதிப்புடையதாகும். இதில் 11 மாணவர்களுக்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் மாதிரி காசோலைகளை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் பூச்சோங்கைச் சேர்ந்த பத்திரிகையாளர் கவிதா மாலதி, மலேசிய இந்திய உலக அழகிப் போட்டி 2026இன் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உயர்கல்வி உதவித்தொகை, ஜப்பானுக்கான இருவழி விமானப் பயணச்சீட்டு, 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டன.

 

பெண்களின் தன்னம்பிக்கை, ஆளுமை மேம்பாடு, கல்வி முன்னேற்றம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்படும் நிதி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் சமூக நலத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், மலேசியா முழுவதும் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கான ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சிகளையும் இவ்வமைப்பு முன்னெடுத்து வருகிறது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments