கிளேபாங், ஆயர் குரோ, பாயா ரூம்புட் மற்றும் மாச்சாப் ஜெயா ஆகிய பகுதிகளில் வாக்காளர்களையும் தேர்தல் பிரசாரக் குழுவினரையும் அவர் சந்திக்கவுள்ளதாக மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி தெரிவித்தார்.
அன்வாரின் வருகை, தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கும் பிரசாரக் குழுவினருக்கும் உற்சாகமளிப்பதுடன், வாக்காளர்களிடையே கூட்டணிக்கான ஆதரவை வலுப்படுத்தவும் உதவும் என அவர் கூறினார்.
புக்கிட் பாருவில் நடைபெற்ற தினசரி செய்தியாளர் சந்திப்பில் பேசிய அட்லி ஸஹாரி, எஞ்சியுள்ள பிரசார நாட்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளில் வேட்பாளர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள் என்றார்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல், அரசாங்க நிர்வாக நடைமுறைகளில் ஏற்படும் காலதாமதம் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மக்களின் கருத்துகள் கேட்டறியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை அளவிடக்கூடிய அடிப்படையில் மதிப்பீடு செய்ய வாக்காளர்களுக்கு உரிமை உண்டு என்றும் அட்லி ஸஹாரி குறிப்பிட்டார்.
பயண நேரம், விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதற்கான கால அளவு, வேலைவாய்ப்புகள் மற்றும் மலாக்காவில் உருவாக்கப்படும் வருமான வாய்ப்புகள் ஆகியவை இதற்கான முக்கிய அளவுகோல்களாக அமையும் என்றார இதனிடையே, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 14ஆம் தேதியும், முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10ஆம் தேதியும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.