ஜெருசலேம்,ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல்
‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். குறிப்பாக இஸ்ரேலில் உள்ள அரபு குடிமக்கள் அதிக அளவில் வாக்கு செலுத்தினர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசென்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்தன. தேர்தலில் போட்டியிட்ட அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.
ஜனாதிபதி
இதனிடையே இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகளை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனைகளை தொடங்கினார்.
திருப்புமுனை
இந்நிலையில், இஸ்ரேல் தேர்தலில் பெரும் திருப்புமுனையாக நெதன்யாகு தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஐக்கிய தோரா ஜுடாயிசம்(யூ.டி.ஜே.) கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, 53 இடங்களைப் பெற்றிருந்த நெதன்யாகு கூட்டணியின் பலம் தற்போது 46 ஆக குறைந்துள்ளது.
மறுபுறம் காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு, அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட்(11 இடங்கள்) மற்றும் ரா’அம்(8 இடங்கள்) ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் 48 இடங்களைப் பெற்றிருந்த காடி ஐசென்கோட் தலைமையிலான கூட்டணியின் பலம் தற்போது 67 ஆக அதிகரித்துள்ளது.
வெளியில் இருந்து ஆதரவு
ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் பெரும்பான்மை தேவை என்ற நிலையில், ஐசென்கோட் தலைமையிலான கூட்டணி தற்போது 67 இடங்களுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. இதில் அரபு கட்சியான ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி, ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் எனவும் அறிவித்துள்ளது.
ஆலோசனைகள் நிறைவு
நெதன்யாகு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது வாக்கு எண்ணிக்கை