Offline
Menu
இங்கிலாந்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்த அமெரிக்க ராணுவ அதிகாரி கைது
By Administrator
Published on 11/13/2026 11:00
News

லண்டன் இங்கிலாந்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரி கைது

இங்கிலாந்தின் குளோசெஸ்டருக்கு அருகே உள்ள இம்ஜின் படைத்தளத்தில் நேட்டோ அமைப்பு பிரிவில் பணியாற்றி வந்த அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

41 வயதான அந்த அதிகாரி, தேசிய பாதுகாப்பு சட்டம் 2023-ன் இரண்டு பிரிவுகளை மீறியதாக கைது செய்யப்பட்டார். இந்த குற்றச்சாட்டுகள் வெளிநாட்டு உளவுத்துறைக்கு உதவுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தகவல்களை பெறுதல் அல்லது வெளியிடுதல் ஆகும். கைது செய்யப்பட்ட அந்த அதிகாரியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால், ரஷியாவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்து உள்ளது.

Comments