Offline
Menu
அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொலை மிரட்டல்
By Administrator
Published on 11/19/2026 11:00
Entertainment
200 பேர் தயார்… குண்டு கவச கண்ணாடி கூட பாதுகாக்க முடியாது

மும்பை அமிதாப், அபிஷேக் பச்சனை குண்டு கவச கண்ணாடியால் கூட பாதுகாக்க முடியாது என கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

 

பாலிவுட் நடிகர்களில் ரசிகர்களிடையே அதிக பிரபலம் வாய்ந்தவராக அறியப்படுபவர் அமிதாப் பச்சன். இந்நிலையில், அவருக்கு பிரபல தாதா கோல்டி தில்லான் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி டெல்லி போலீசார் விசாரித்து, அந்த கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

 

200 பேர் தயார்
இந்நிலையில், அந்த கும்பல் தரப்பில் சமூக ஊடகத்தில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதில், விகாஸ் தாக்குர் மற்றும் தீபக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு விட்டதனால், திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மும்பையில் 200 பேர் தயாராக உள்ளனர் என மிரட்டல் விடுத்துள்ளது.

 

அதனுடன், சீக்கிய சமூகத்திற்கு எதிராக பேசுபவர்களை எச்சரித்ததுடன், சீக்கிய கலவரத்திற்கு பொறுப்பானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றும் தெரிவித்தது. அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனை குறிப்பிட்டு, துப்பாக்கி குண்டு கவச கண்ணாடியால் கூட அவர்களை பாதுகாக்க முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

 

வெடிகுண்டு மிரட்டல்
கடந்த மாதத்தில், நடிகர் அமிதாப் பச்சனின் மும்பையில் உள்ள ஜல்சா வீட்டுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, தனித்தனியே 3 மெயில்கள் வந்தன. இந்த சூழலில், இந்த அச்சுறுத்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த சூழலிலேயே, கடந்த 1-ந்தேதி மும்பையில் உள்ள வீட்டுக்கு வெளியே துப்பாக்கி குண்டு கவச கண்ணாடிக்கு பின்னால் நின்றபடி ரசிகர்களை சந்தித்து பேசினார்.

Comments