Offline
Menu
பள்ளியிலிருந்து வீடு திரும்பியபோது மோட்டார் சைக்கிள் விபத்து
By Administrator
Published on 11/27/2026 15:00
News
உடன்பிறப்புகள் இருவர் பலி!

பாசீர் மாஸ், 

இங்குள்ள கம்போங் தெண்டோங்கில் இன்று பிற்பகல் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் உடன்பிறப்புகள் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் மூத்த சகோதரர் காயமடைந்தார்.

 

பிற்பகல் 2.30 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் ஆறு மற்றும் 10 வயதுடைய இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் ராஜா பெரெம்புவான் ஸைனாப் II மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

 

அவர்களின் 18 வயது மூத்த சகோதரர் காயமடைந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

 

பள்ளி முடிந்து தனது இரு இளைய உடன்பிறப்புகளையும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.

 

இதனிடையே, பாசீர் மாஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் மஸ்லான் ஹசான் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

Comments