Offline
குருவாயூர் கோயிலில் மகள் திருமணத்தை ஆடம்பரமின்றி நடத்தி முடித்த நடிகர் ஜெயராம்!
Published on 05/11/2024 01:37
Entertainment

நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் எளிமையாக குருவாயூரில் நடந்து முடிந்திருக்கிறது. கோயிலில் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

’தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்டப் பல படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ஜெயராம். கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளம், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராமும் நடிகராக வலம் வருகிறார்.

ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்னீத் கிரீஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பாலக்காட்டைச் சேர்ந்த நவ்னீத் லண்டனில் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டாக பணிபுரிகிறார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் முடித்துள்ளனர். மணமக்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Comments