Offline
பிரேம்ஜி-க்கு ஜூன் மாதம் திருமணமா? – வைரலாகும் அழைப்பிதழ்
Published on 06/02/2024 05:58
Entertainment

நகைச்சுவை நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் சகோதரர் ஆவார். இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. தமிழ் திரையுலகில் புகழ்பெற்றவர்கள் நிறைந்த நிறைந்த குடும்பத்தில் பிறந்த பிரேம்ஜியின் திருமணம் குறித்த அறிவிப்பு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நடிகர் பிரேம்ஜிக்கு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தனி முருகன் கோவிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற இருப்பதாக கூறும் அழைப்பிதழ் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.அந்த அழைப்பிதழில் பிரேம்ஜிக்கு இந்து என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 

Comments