Offline
ஹாங்காங்கில் குடும்பத்துடன் Chill செய்யும் நயன்தாரா
Published on 06/03/2024 13:00
Entertainment

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் நயன்தாரா. விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா கடந்த ஆண்டு சாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் ரூ.1200 கோடி வசூலிலும் சாதனை படைத்தது.

தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் குடும்பத்துடன் சொந்த ஊரான கொச்சி மற்றும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஹாங்காங் நாட்டுக்கு கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்.

ஹாங்காங் கடற்கரையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஜாலியாக வலம் வந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் நயன்தாரா.

 

Comments