செர்பியா நாட்டை சேர்ந்த உலகில் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஜோகோவிக் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தன் சிறப்பான பார்மில் இல்லாமல் தவித்து வந்தார் ஜோகோவிக். எனவே பிரெஞ்சு ஓபன் தொடரின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் ஜோகோவிக் விளையாடி வந்தார்.
என்னதான் ஜோகோவிக் பழைய பார்மில் இல்லை என்றாலும் போராடி காலியிறுதி வரை சென்றுவிட்டார். காலியிறுதிக்கு தகுதி பெரும் போட்டியில் பிரான்சிஸ்கோ என்பவரை வீழ்த்தினார் ஜோகோவிக். அவரை வீழ்த்தி ஜோகோவிக் காலியிறுதி போட்டிக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இதுவரை 24 முறை grand slam பட்டங்களை வென்ற ஜோகோவிக் மேலும் ஒருமுறை பிரெஞ்சு ஓபன் தொடரை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசியாக நடந்த போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்தார் ஜோகோவிக். இதைத்தொடர்ந்து நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக ஜோகோவிக் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கின்றது. ஏனென்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லாத ஜோகோவிக் இம்முறை பிரெஞ்சு ஓபன் தொடரை வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரோலண்ட் கரோஸ் பைனலில், ஜோகோவிச் ரூட்டை நேர் செட்களில் தோற்கடித்திருந்தார்.ஆனால் ஜோகோவிக் தற்போது காயம் காரணமாக விலகியிருப்பதால் ரூட் அரையிறுதிக்கு முன்னேறுவார், அங்கு அவர் நான்காம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அல்லது 11ஆம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாரை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.