நேற்று நடைபெற்ற அனைத்துலக நட்புமுறை ஆட்டத்தில் போர்த்துகல் அணியும் குரேஷியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் குரேஷிய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணியை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்திலேயே குரேஷியா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி லுக்கா மோட்ரிச் அவ்வணிக்கான முதல் கோலை புகுத்தினார். முதல் பாதி நேரம் 0- 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் முடிவுற்ற நிலையில் 48ஆவது நிமிடம் டியேகோ ஜோத்தா போர்த்துகல் அணிக்கான கோலைப் புகுத்தி ஆட்டத்தை சமப்படுத்தினார்.
ஆனால் 56ஆவது நிமிடத்தில் புடிமிர் குரேஷியா அணிக்கான 2ஆவது கோலை புகுத்தி அவ்வணியின் வெற்றியை உறுதி செய்தார்.