Offline

LATEST NEWS

நடிகர் விஜய் பிறந்த நாளில் மீண்டும் வெளியாகிறது போக்கிரி, துப்பாக்கி!
Published on 06/13/2024 02:40
Entertainment

நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘போக்கிரி’ படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. விஜய்க்கு வரும் ஜூன் 22ம் தேதி 50வது பிறந்த நாளாகும்.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படம் வரும் ஜூன் 21ம் தேதி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் மீண்டும் திரைக்கு வருகிறது.

இதேபோல் விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் 2007ல் வெளியான ‘போக்கிரி’ படமும் 21ம் தேதி ரிலீஸாகிறது. ஏற்கனவே கில்லி படம் மறு வெளியீடாக திரைக்கு வந்து சமீபத்தில் 50வது நாளை கொண்டாடியது.

இந்நிலையில் மேலும் 2 விஜய்யின் படங்கள் மறு ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Comments