தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்றும் மற்ற நாடுகளில் பிற நாட்களிலும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
வாழும் காலத்தில் நமக்காக வாழும் ஒரு மனிதரை கொண்டாடுவதே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாகும். நாம் வளரும் போது நம்முடைய தாய் நம்மை செல்லமாக வளர்ப்பார்கள். ஆனால் தந்தை மிகக் கண்டிப்பானவராக இருப்பார். பெரும்பாலும் தந்தைக்கு வேலை நெருக்கடி போன்ற காரணங்களால் தந்தை நம்முடன் நேரம் செலவிடுவதே குறைவுதான். இதன் காரணமாக நாம் தந்தை என்றாலே ஒரு வெறுப்புடன் தான் அவரை பார்ப்போம். ஆனால் தந்தையின் கண்டிப்பு தான் நம்மை சிறப்பாக வழி நடத்தியது என்பதை நாம் தந்தையான பிறகே உணர்வோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னுடைய தந்தை தான் முதல் ஹீரோ அல்லவா..! தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டத்தினை தன் குழந்தைகள் படக்கூடாது என்று எண்ணி பல தியாகங்களை செய்திருப்பவர் தந்தை. அவர்களுக்கு அன்றைய தினத்தில் எந்த பரிசுகளையும் வழங்க முடியவில்லை என்றாலும் தந்தையுடன் நேரத்தினை செலவிடுங்கள்.