Offline
இந்தியின் `சூரரைப் போற்று’- ஜூலை முதல்
Published on 06/17/2024 05:01
Entertainment

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் கையிலே ஆகாசம் பாடல் கொடுத்த உனர்வை வார்த்தையால் சொல்ல முடியாது. அது நமக்கு எப்பொழுது கேட்டாலும் ஒரு கூஸ்பம்ப்ஸ் பாடலாக இருக்கும்.

தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய சுதா கொங்கரா முடிவு செய்தார். இந்தியில் பிரபல நடிகர் அக்ஷய் குமார், ராதிகா மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கும் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தியில் சர்ஃபிரா என தலைப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்துவந்த நிலையில். தற்பொழுது திரைப்படம் ரிலீஸ்க்கு  தயாராகியுள்ளது.

சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதை படக்குழுவினர் போஸ்டர்  பதிவிட்டு அறிவித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் வரும் ஜூன் 18 வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Comments