Offline
'விடுதலை’ படப்பிடிப்பில் சூரிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம்; உண்மையை உடைத்த வெற்றிமாறன்!
Entertainment
Published on 06/17/2024

’விடுதலை’ படத்தில் நடிகர் சூரிக்கு ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியான ‘கருடன்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், ”’இன்றைய காலகட்டத்தில ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தர மறுக்கிறார்கள். டிஜிட்டல் தளங்களை நம்பித்தான் திரைப்பட வணிகம் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதைத்தான் நாம் மாடலாக வடிவமைத்து வருகிறோம். டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றிலிருந்து படத்திற்கான முதலீடு கிடைக்கும். திரையரங்க வெளியீடு என்பது கூடுதல் போனஸ். இதை இந்த வருடம் மாற்றிய சில படங்களில் ’கருடன்’ திரைப்படமும் ஒன்று.

இந்த வகையிலான வணிகம் தான் ஜனநாயகம் மிக்கது என உணர்கிறேன். ஏனெனில் டிஜிட்டல் தளங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றிற்காக படத்தை உருவாக்கும் போது அவர்களுக்கு அந்தந்த காலகட்டத்தில் என்ன தேவையோ அதனைத்தான் அவர்கள் வாங்குவார்கள்.‌

அவர்களுக்கு தேவையானதை எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார்கள். தேவையில்லை என்றால் அதனை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள். இது ஒரு புறம் மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு படைப்பாளியாக, ஒரு தயாரிப்பாளராக திரையரங்குகளில் வெளியிட்டு, நேரடியாக மக்களிடம் கொண்டு செல்கிற போது படைப்பு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இது டிஜிட்டல் தளங்களில் இல்லை” என்றார்.

 

 

Comments