Offline
‘விளையாடாமலே’.. சூப்பர் 8-க்கு தகுதிபெறப் போகும் அமெரிக்கா: வெளியேறும் பாகிஸ்தான்!
Entertainment
Published on 06/17/2024

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியுடன் சேர்த்து, அமெரிக்க அணியும் தகுதிபெற வாய்ப்புள்ளது.டி20 உலகக் கோப்பை லீக் சுற்று, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

டி20 உலகக் கோப்பை:

சூப்பர் 8 சுற்றுக்கு இதுவரை 5 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

தகுதிபெற்ற அணிகள்:

இதுவரை தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் மட்டுமே தகுதிபெற்றுள்ளன. நியூசிலாந்து, இலங்கை ஆகிய பெரிய அணிகள் வெளியேறிவிட்டன.

வாய்ப்புள்ள அணிகள்:

மீதமுள்ள மூன்று இடங்களை பிடிப்பதற்கு வங்கதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

பலத்த போட்டி:

குறிப்பாக, குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. கடைசி லீக் ஆட்டத்தில், அமெரிக்க அணியை அயர்லாந்து வீழ்த்தினால் மட்டுமே, நெட் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கும்.

மழை பெய்வது உறுதி:

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான ஆட்டத்தின்போது மழை பெய்வது உறுதி என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது, பாகிஸ்தான் அணிக்கு கெட்ட செய்திதான்.

மழை பெய்தால், பாகிஸ்தான் காலி:

அமெரிக்க அணி 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் இரண்டு புள்ளிகளுடன் இருக்கிறது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ரத்தானால், அமெரிக்காவுக்கு ஒரு புள்ளி கிடைத்து, 5 புள்ளிகளை பெற்றுவிடும். பாகிஸ்தான் அணி கடைசி ஆட்டத்தில், கனடாவை வீழ்த்தினாலும், அதிகபட்சமாக 4 புள்ளிகள் வரை மட்டுமே பெற முடியும்.

 

Comments