Offline
Menu

LATEST NEWS

தோனிக்கு மாற்றான’.. விக்கெட் கீப்பர் இவர்தான்?
Published on 06/19/2024 01:49
Entertainment

ஐபிஎல் 18ஆவது சீசனில் இருந்து, தோனிக்கு மாற்றாக இவர்தான் இருப்பார் என்பது தெரிய வந்துள்ளது.ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது.

அபாரமான செயல்பாடு:

சிஎஸ்கே முதல் 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்ற நிலையில், அடுத்து சொதப்ப ஆரம்பித்தது. ஆம், அடுத்த 8 போட்டிகளில் 4 வெற்றிகளைதான் பெற முடிந்தது. இதனால், பிளே ஆப் வாய்ப்பும் பறிபோனது.

அபார கேப்டன்ஸி:

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, 17ஆவது சீசன் துவங்குவதற்கு முன், கேப்டன் பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் அந்த பதவியை கொடுத்த நிலையில், அவரும் அபரமாக கேப்டன்ஸி செய்து அசத்தினார்.

ருதுராஜ் கெய்க்வாட்:

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் மகாராஷ்டிரா பிரிமியர் லீக் தொடரில், ருதுராஜ் கெய்க்வாட் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம், தோனிக்கு அடுத்து, சிஎஸ்கேவின் விக்கெட் கீப்பராக இவர்தான் இருப்பார் என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. சிஎஸ்கேவுக்கு மீண்டும் விக்கெட் கீப்பர் பேட்டர், கேப்டனாக கிடைத்துவிட்டார் என ரசிகர்கள், இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

தோனியை தக்கவைப்பது கடினம்:

மெகா ஏலத்திற்கு முன், தோனியை அதிக தொகை கொடுத்து தக்கவைத்தால், சில முக்கிய வீரர்களை வாங்க முடியாமல் போகும். இதனால், தோனியை பயிற்சியாளர் குழுவில் சேர்த்துவிட்டு, அவருக்கு மாற்றான விக்கெட் கீப்பரை தயார் செய்யும் நிலையில், சிஎஸ்கே இருக்கிறது.

Comments