Offline
மறுமணம், கொலை மிரட்டல்; ‘பானா காத்தாடி’ திரைப்பட இணை இயக்குநர் மீது பரபரப்பு புகார்!
Published on 07/01/2024 12:56
Entertainment

வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ‘பானா காத்தாடி’ திரைப்பட இணை இயக்குநர் மீது அவரது மனைவி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் எழில் நகரைச் சேர்ந்தவர் பூர்ணிமா(41). இவர் கோவையைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து சட்டப்படி விவகாரத்து பெற்றார். இதையடுத்து 2016-ம் ஆண்டு குடியாத்தம் செட்டிக்குப்பம்ச் பகுதியை சேர்ந்த லட்சுமிகாந்தன் வயது (45) என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

பானா காத்தாடி’ உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லட்சுமி காந்தன் தற்போது தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பூர்ணிமா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதில், ” என்னுடைய கணவர் லட்சுமிகாந்தன் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு லட்சுமிகாந்தனை மறுமணம் செய்து கொண்டு சென்னையில் 5 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தோம். திருவண்ணாமலையில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகலாம் என்று லட்சுமிகாந்தன் தெரிவித்ததால் தற்போது என்னுடைய தாய் வீட்டில் தங்கி இருக்கிறேன்.

இந்த நிலையில் சுவேதா என்ற பெண்ணுடன் என் கணவர் லட்சுமிகாந்தன் தனியாக வசித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து கேட்டதற்கு என் கணவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் தெரிவித்துள்ளார்.

Comments