Offline
கைதி 2, சர்தார் 2, தீரன் அதிகாரம் 2… எல்லாமே பார்ட் 2-னா எப்படி
Published on 07/04/2024 00:12
Entertainment

இயக்குனர் மணி ரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக கார்த்தி அறிமுகமாகினார். நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது கார்த்திக்கு.

அதைத்தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், தோழா போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். 2017 ஆம் ஆண்டு எச்,வினோத் இயக்கத்தில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார். இப்படம் மிகவும் திரில்லராக எடுத்து இருப்பார் எச் வினோத். பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு கைதி திரைப்படத்தில் நடித்தார். இப்படம் கார்த்தி திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

கார்த்தி ஜப்பான் திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு கார்த்தி சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்து முடித்து விட்டு லோகேஷ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கடுத்து எச். வினோத் இயக்கத்தில் தீரன் பாகம் 2ல் நடிக்கவுள்ளார். எச்.வினோத் தளபதி 69 படத்தை இயக்கி முடித்தப்பின் தீரன் பாகம் இரண்டை இயக்கவுள்ளார். இவ்வாறு கார்த்தி பல சுவாரசியமான லைன் அப்ஸில் உள்ளார். அடுத்து வெளிவரும் கார்த்தி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Comments