Offline
‘GOAT’ இயக்குநர் வெங்கட்பிரபுவை சந்தித்த விஜய்சேதுபதி… அட விஷயம் இதுதானா?
Published on 07/05/2024 03:25
Entertainment

’GOAT’ இயக்குநர் வெங்கட்பிரபுவை நடிகர் விஜய்சேதுபதி அமெரிக்காவில் சந்தித்துள்ளார்.

நடிகர் விஜயின் ’GOAT’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

குறிப்பாக நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் இந்தக் கதையில் நடிக்கிறார். இதனால், விஎஃப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வர வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக உள்ளது.

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள முன்னணி விஎஃப்எக்ஸ் நிறுவனத்திடம் இந்தப் பணியை கொடுத்து செய்து வருகிறார் வெங்கட்பிரபு.

அங்கு விஜய்சேதுபதியை சந்தித்து இருக்கிறார். அவருடன் எடுத்த செல்ஃபியை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘இது லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்திருக்கிறது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

விஜய்சேதுபதி மட்டுமல்லாது ‘மகாராஜா’ பட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதனையும் சந்தித்து பேசியிருக்கிறார் வெங்கட்பிரபு.

‘மகாராஜா’ திரைப்படம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு திரையிடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, ’மகாராஜா’ படக்குழு அமெரிக்கா சென்றிருக்கிறது. அங்குதான் இவர்களை சந்தித்திருக்கிறார் வெங்கட்பிரபு. புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர், ‘GOAT’ படத்தில் விஜய்சேதுபதியையும் நடிக்க வைக்கலாம்’ என சொல்லி வருகின்றனர்.

Comments