மாமன்னர் அரியணை அமரும் விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை கோலாலம்பூரில் 14 சாலைகள் மூடப்படும்
17ஆவது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் பதவியேற்பதற்காக கோலாலம்பூரில் உள்ள 14 சாலைகளை போலீசார் சனிக்கிழமை தற்காலிகமாக மூடுவார்கள். கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி இசா கூறுகையில், அரியணை அமரும் விழா மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விருந்தினர்களுக்கு வழிவகை செய்யும் வகையில், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சாலைகள் மூடப்படும்.
மூடப்படவிருக்கும் சாலைகள்:
ஜாலான் துன் ரசாக்
ஜாலான் கியா பெங்
ஜாலன் ராஜா சூலான்
ஜாலான் அம்பாங்
ஜாலான் சுல்தான் இஸ்மாயில்
லெபுராயா சுல்தான் இஸ்கந்தர்
ஜாலான் துவாங்கு அப்துல் ஹலீம்
ஜாலான் செமந்தான்
ஜாலான் டாமன்சாரா
ஜாலான் இஸ்தானா
கோலாலம்பூர்-சிரம்பான் விரைவுச்சாலை
ஜாலான் கூச்சிங் (தெற்கு நோக்கி)
டத்தோ ஆன் ரவுண்டானா
ஜாலான் பார்லிமென்ட்
முடிசூட்டு விழா சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய 387 போக்குவரத்து காவலர்கள் சிறப்பு விருந்தினர்களை அழைத்துச் செல்லவும், போக்குவரத்தை நிர்வகிக்கவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ருஸ்டி கூறினார்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், இந்த வழித்தடங்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் சாலை பயன்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார் அவர்.