லண்டனில் நடந்த கம்பன் விழாவில் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு “செந்தமிழ் செல்வர்” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கம்பனின் தமிழ் புலமையை கொண்டாட லண்டன் ‘அறிவு அறக்கட்டளை’யின் ஏற்பாட்டில் கம்பன் விழா கடந்த ஜுலை 13,14 தேதிகளில் நடைபெற்றது.
இந்த விழாவில் மலேசியா, இந்தியா, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்து, சிறப்பித்தனர்.
இந்த விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், ம.இ.கா தேசிய உதவித் தலைவருமாகிய டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்புரையாற்றினார்.
விழாவில் மக்கள் ஓசை நிருபர் பா.பிரசாந்த் நேரடியாக சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சரவணன், என்றைக்கு இந்த மொழியை நாம் போற்றவில்லையோ இந்த இனம் அழிந்துவிடும். தமிழை போற்ற வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமை. ஆகவே, இதுபோன்ற விழாக்கள் அடுத்த தலைமுறைக்கு தன்னம்பிக்கையையும் பெரிய உந்து சக்தியையும் கொடுக்கும் என குறிப்பிட்டார்.
இந்த விழாவில் டத்தோஸ்ரீ சரவணனுடன் இலங்கையைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ், தமிழரசு சிவக்குமார், பேராசிரியர் ஸ்ரீ பிரசாந்தன், தமிழ் நாட்டைச் சேர்ந்த பாரதி பாஸ்கர் ஆகிய இலக்கிய பிரபலங்கள் சொற்பொழிவாற்றினார்கள்.