கோலாலம்பூர்:
போர்ப்ஸ் அறிக்கையில் தென்கிழக்காசியாவின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் கோலாலாம்பூருக்கு 5ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது குறித்து உள்துறை அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை உலகளாவிய அமைதிக் குறியீடு 2024க்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. உலகின் மிகவும் அமைதியான நாடுகளில் 10ஆவது இடத்தில் மலேசியா உள்ளது. அதே வேளையில் ஆசிய பசிபிக் நாடுகளில் மலேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனினும் போர்ப்ஸ் ஆய்வில் மதிப்பீடுகளை நான் முழுமையாக படிக்கவில்லை. அதனால் அதை நான் மறுக்கவும் விரும்பவில்லை. ஆனால் இது தொடர்பான போர்ப்ஸ் ஆலோசகர் தளத்தின் அறிக்கையை உள்துறை அமைச்சு ஆராயும் என்று அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார். உள்துறை அமைச்சின் மாதாந்திர சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.