Offline
Menu
காணாமல் போன 6 வயது சிறுமி சிலாங்கூரின் பத்தாங் காலியில் பாதுகாப்பாக மீட்பு
Published on 07/24/2024 00:51
News

கோலாலம்பூர்:

கடந்த சனிக்கிழமை (ஜூலை 20) ஜோகூர், இஸ்கந்தர் புத்திரியில் உள்ள எக்கோ கேலரியா (Eco Galleria) வணிக மையத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஆறு வயது ஆல்பர்டைன் லியோ ஜியா ஹுய் இன்று பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி சிலாங்கூரில் உள்ள பத்தாங் காலியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் உறுதிப்படுத்தினார்.

நேற்று, சிறுமி காணாமல் போனது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஜோகூர் மாநிலக் காவல்துறை மூன்று நபர்களைக் கைது செய்தனர். அத்தோடு மேலதிக விசாரணைக்காக அவர்கள் நேற்று முதல் 4 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments