Offline
பண்டார் பூச்சோங் ஜெயாவிலுள்ள விடுதியில் தீ!
Published on 07/27/2024 05:40
News

கோலாலம்பூர்:

பண்டார் பூச்சோங் ஜெயாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் இன்று தீப்பரவல் ஏற்பட்டது.

19 முதல் 65 வயதுக்குட்பட்ட ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

குறித்த தங்கும்விடுதி கட்டிடத்தின் மூன்றாவது தளம் முற்றாக தீயில் எரிந்து நாசமானது.

சம்பவம் குறித்து மதியம் 2 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு உதவி இயக்குனர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

உடனே பூச்சோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பணியாளர்கள் 9 பேர் ஒரு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்ந்து விசாரணையில் உள்ளது என்று அவர் சொன்னார்.

Comments