Offline
கல்வியில் பாராபட்சம் காட்டுவது கடும் துரோகமாகும்
News
Published on 07/27/2024

பல உலக நாடுகள் ஜனநாயகத்தைத் தங்களின் அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்டிருக்கின்றன. ஜனநாயகம் என்றவுடன் அது பொதுவாக மக்களின் நலனைக் குறித்ததாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும். ஜனநாயகம் என்ற போர்வையின் அடியில் அராஜக ஆட்சி தலைவிரித்தாடுவதும் உண்டு. நாட்டுக்கு நாடு ஜனநாயகத் தத்துவம் பல வேறுபாடுகளுடன் செயல்படுவது ஆச்சரியமல்ல.

மலேசியாவும் ஜனநாயகத்தைத் தனது அரசியல் கோட்பாடாகக் கொண்டிருக்கிறது. இதற்குச் சான்று நமது அரசமைப்புச் சட்டத்தின் அமைப்பைப் பார்க்கும் போது அதனுள் இணைந்திருக்கும் ஜனநாயகத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம்.

அரசமைப்புச் சட்டம்

நாட்டு நிர்வாகம் எவ்வாறு இயக்கப்பட வேண்டும், அதற்கான சட்டங்கள், வழிமுறைகள் என்ன என்பதை அரசமைப்புச் சட்டம் வழிகாட்டுகிறது. நாட்டு நலன் எனும்போது அது மக்களின் நலனை உட்பட்டதாகும்.

இதற்குத் தரமான, திறமையான மாணவர்கள் தேவை. அவர்களை எப்படி திரட்டுவது? இதுவே அரசின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது ஒன்றும் விந்தை அல்லவே.

நீதித்துறை மிகவும் முக்கியமானது என்று சொன்னால் போதாது. அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். சுயேச்சையான நீதித்துறை தேவை. எதற்கும் அஞ்சாத, அரசமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்தும் நீதிபதிகள் தேவை.

நீதி பரிபாலனம் எனின் வழக்குரைஞர்களும் தேவை. எனவே, அளவு மீறிய வருமானத்தைக் குறிக்கோளாகக் கொள்ளாத, உண்மைக்குக் குரல் தரும் நேர்மையான வழக்குரைஞர்கள் தேவை. இவையன்றி நாட்டு நிர்வாகத்தைச் செம்மையாக வழிநடத்தி செல்ல திறமையான நிர்வாகிகள் தேவை.

ஆனால், மக்களின் சுகாதாரம் அதிமுக்கியமானதாகும். சமுதாயத்திற்குத் தேவையான மருத்துவர்களைத் தயார்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உண்டு. எனவே, தரமான மருத்துவக் கல்வி தேவை. சிறப்பான மருத்துவக் கல்வி பெற்றவர்கள் தேவை. புதுப்புது நோய்கள் உருவாகின்றன. அவற்றைத் தவிர்க்கும் நூதன மருத்துவ ஆய்வு தேவைப்படும்.

Comments