Offline

LATEST NEWS

அம்பாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ ; பெண் பலி, ஆடவர் காயம்
Published on 07/29/2024 00:06
News

கோலாலம்பூர்:

ஜாலான் மாஜூ 1/11, தாமான் லெம்பா மாஜூ, அம்பாங்கில் உள்ள கார்டன் டூர் எனப்படும் ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீச்சம்பவத்தில் ஒரு ஆடவர் வலது கையில் தீக்காயம் அடைந்ததார, அதே நேரத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

80 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளான 28 வயதுப் பெண் இறந்துவிட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர் அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“எங்களுக்கு இரவு 9.46 மணிக்கு அவசர அழைப்பு வந்தது, பாண்டான் இந்தா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“சம்பவ இடத்திற்கு சென்ற குழு, பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை மீட்டு, அவசர மருத்துவ மீட்பு சேவை (EMRS) வாகனத்தில் அம்பாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அதே நேரத்தில் பெண் இறந்துவிட்டதாக மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் குடும்ப உறுப்பினர்கள் என்று நம்பப்படுகிறது, ஆனால் நாங்கள் இன்னும் முழு விவரங்களைப் பெறவில்லை,” என்று அவர் கூறினார்.

Comments