Offline
விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பல்கள் ஜோகூர் கடற்பகுதியில் தடுத்துவைப்பு
News
Published on 07/31/2024

ஜோகூர், தஞ்சோங் பாலாவுக்கு வடகிழக்கே 25 கடல் மைல் தொலைவிலுள்ள கடற்பகுதியில், கடந்த ஜூலை 19ஆம் தேதியன்று மோதிக்கொண்ட இரண்டு பெரிய எண்ணெய்க் கப்பல்கள் விசாரணைக்கு உதவுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய கடற்துறை ஜூலை 30ஆம் தேதியன்று தெரிவித்தது.

சிங்கப்பூர் கொடியேந்திய ‘ஹாவ்னியா நைல்’, பிரின்சிப் கொடியேந்திய ‘சிரேஸ் 1’ ஆகிய கப்பல்கள் மோதிக்கொண்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரிந்தன.

விபத்து நிகழ்ந்தபோது ‘ஹாவ்னியா நைல்’ கப்பலில் எளிதில் தீப்பிடித்துக்கொள்ளக்கூடிய ‘நாஃப்தா’ ரசாயனம் அதிக அளவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கப்பலில் ‘நாஃப்தா’ ரசாயனம் இன்னும் இருப்பதாக தேசிய கடற்துறை தலைமை இயக்குநர் கேப்டன் முகம்மது ஹலிம் அமாட் தெரிவித்தார்.

மேலும் இந்த வழக்கு வணிகக் கப்பல் கட்டளைச் சட்டம் (எம்எஸ்ஓ) 1952/60-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த கப்பல்கள் மோதியதில் எண்ணெய் கசிவு எதுவும் கண்டறியப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

Comments