கோலாலம்பூர்:
உடல் எடை அதிகமாகவுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பதவி உயர்வு அல்லது சிறந்த சேவையாளருக்குரிய விருது வழங்கப்படாது என தேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) டைரக்டர் ஜெனரல் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார்.
சிறந்த” உடல் நிறை குறியீட்டெண் என சொல்லப்படும் BMI யானது ஒவ்வொரு வீரர்களும் அவர்களது சேவை, பதக்கங்களை பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும்.
எனவே தீயணைப்பு வீரர்கள் உட்பட நாட்டின் தேசிய பாதுகாப்பு படையிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் உடல் எடையை குறைத்து உடற்தகுதியுடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
மொத்தம் 1,900 பணியாளர்கள் அல்லது 17% தீயணைப்பு வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதிக எடை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் சிலருக்கு உயர் இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்கள் (NCD) இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கவலை தெரிவித்தார்.