Offline
மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் பாதிப்பு.. சர்வதேச அளவில் பயனர்கள் தவிப்பு.. என்னதான் ஆச்சு?
News
Published on 08/02/2024

வாஷிங்டன்: பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் கடந்த 19 ஆம் தேதி பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சர்வதேச அளவில் கணினிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டு பல பணிகளும் முடங்கியது. இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சில நாட்களே ஆகியிருக்கும் நிலையில், மீண்டும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் கடந்த 19 ஆம் தேதி சர்வதேச அளவில் முடங்க்கியது. மென்பொருள் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்பது தெரியவந்தது. விண்டோஸ் பயனர்களின் சிஸ்டம்களில் ப்ளூ ஸ்க்ரீன் எரர் 'Blue Screen of Death (BSOD)' எனக் காட்டியது.

மைக்ரோசாப்ட் விளக்கம்: இதனால், மைக்ரோசாப்டின் 365 மற்றும் அதனுடன் இணைந்த கிளவுட் சேவைகள் மற்றும் azure Feautres-களை பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மைக்ரோசாப்ட் 365 சேவைகளை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமம் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம்.

 

Comments