Offline
உலகை நடுங்க வைக்கும் சீரியல் கில்லர்.. 42 பெண்களை கொன்று குப்பை கிடங்கில் வீசிய சைக்கோ இளைஞர்!
News
Published on 08/02/2024

நைரோபி: கென்யாவில் கொடூரன் ஒருவன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல மிரள வைக்கும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.

வீடு முழுக்க ஆயுதங்கள்: கென்யாவில் இருக்கும் அவரது வீட்டை போலீசார் சோதனையிட்டபோது போலீசார் மிரண்டு போனார்கள். வீடு முழுக்க​​அரிவாள், ரப்பர் கையுறைகள், செலோடேப் ரோல்கள், நைலான் சாக்குகள் உள்ளிட்டவை அங்கே இருந்துள்ளன. இந்த கொடூரன் தனது மனைவி உட்பட 42 பெண்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். மேலும், பாதிக்கப்பட்ட பலரது உடலைச் சிதைத்து, உடல் உறுப்புகளைப் போட்டு, கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள ஒரு குப்பைக் கூடத்தில் வீசி இருக்கிறார். போலீசார் விசாரணையில் இந்த குற்றங்களை எல்லாம் அவர் ஒப்புக்கொண்டார். இந்த கொடூரங்களை எல்லாம் செய்தவர் கென்யா நாட்டை சேர்ந்த 33 வயதான காலின்ஸ் ஜுமைசி. இவரை அந்நாட்டு மக்கள் ஒரே "காட்டேரி" என்றே சொல்கிறார்கள். மனித உயிருக்கு மரியாதை இல்லாத பலரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். கென்யாவில் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், இந்த படுகொலை குறித்த தகவல் மிரள வைப்பதாக இருக்கிறது.

சிதைந்த உடல்கள்: இதில் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் எல்லாமே சிதைந்த நிலையிலேயே கண்டறியப்பட்டுள்ளன. சாக்குகளில் பெரும்பாலும் துண்டிக்கப்பட்ட கைகால்கள் மற்றும் உடல் பகுதிகள் இருந்தன. மேலும் எந்த சடலத்திலும் புல்லட் காயங்கள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனை மூலம் உடல்களைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். பெண்கள் மாயமானதாக அளிக்கப்படும் புகார்களை கென்ய போலீசார் உரிய முறையில் விசாரித்து இருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகச் சென்றிருக்காது என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

Comments