Offline
10 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; 71 வயது முதியவர் கைது
Published on 08/07/2024 10:52
News

ஈப்போ:

பாகன் டத்தோவில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 71 வயது முதியவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் 39 வயது தாயாரால் ஆகஸ்ட் 6ஆம் தேதி அளிக்கப்பட்ட ஒரு புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக

பேராக் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறினார்.

சந்தேக நபர் தனது முன்னாள் குழந்தை பராமரிப்பாளரின் கணவர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியதாக அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்டவர் சுங்கை சுமுனில் உள்ள கம்போங் சுங்கை பூலாவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.

“விசாரணைகளுக்கு உதவுவதற்காக குறித்த சந்தேக நபர் இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று (ஆகஸ்ட் 6) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

Comments