Offline

LATEST NEWS

உலு பெர்னாம் வெள்ளம்; 143 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
Published on 08/07/2024 11:32
News

ஷா ஆலம்:

இன்று காலை 8 மணி நிலவரப்படி, உலு பெர்னாமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக மொத்தம் 143 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கம்போங் சுங்கை செலிசிக் பல்நோக்கு மண்டபத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 141 பேராக இருந்த நிலையில், இன்று காலையுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்துள்ளது என்று, உலு சிலாங்கூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை துப்புரவு செய்யும் பணிகள் பல்வேறு அரச நிறுவனங்களின் உதவியுடன் இன்று கூட்டாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

 

Comments