கோலாலம்பூர்:
ஆடவர் ஒருவர் ராம்போ கத்தி போன்ற ஆயுதத்தால் குத்தியதில், ஒரு சமயப்பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட இரு பெண்கள் காயமடைந்தனர்.
கிளானா ஜெயாவில் உள்ள செக்கோலா அகமா இன்சானியா என்ற பள்ளியில் இன்று மதியம் 1.45 மணியளவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பெட்டாலிங் ஜெயா OCPD உதவி ஆணையர் ஷாருல்நிஜாம் ஜாபர் தெரிவித்தார்.
குறித்த பள்ளிக்கும் மசூதிக்கும் இடையில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பறையில் இந்த சம்பவம் நடந்தது” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் சிகிச்சைக்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் காரில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படுகிறது என்றும், அவரை போலீசார் வலைவீசி தேடிவருவதாகவும் அவர் சொன்னார்.