கோலாலம்பூர்: திங்கட்கிழமை KLFA கால்பந்து மையத்தில் கால்பந்து போட்டியின் போது கூர்மையான ஆயுதம் வைத்திருந்த 22 வயது கால்பந்து வீரரையுன் அவரது காதலியையும் போலீசார் கைது செய்துள்ளனர். வங்சா மாஜு காவல்துறையின் தலைமை உதவி ஆணையர் முகமட் லாசிம் இஸ்மாயில் கூறுகையில், வளர்ந்து வரும் கால்பந்து வீரர் என்று நம்பப்படும் அந்த நபரையும், அவரது 21 வயது காதலியையும் போலீசார் நேற்று மாலை 6.30 மணியளவில் கிள்ளான் நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.
போட்டியின் போது தற்காப்புக்காக கூரிய ஆயுதத்தை பயன்படுத்தியதை சந்தேக நபர் ஒப்புக்கொள்ளும் முன் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழு தம்பதியிடம் விசாரணை நடத்தியதாக லாசிம் கூறினார். அரிக்கும் மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் சட்டம் 1958 இன் பிரிவு 6(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 6(1)(c) இன் கீழ் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததால் காதலி தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.