Offline
Menu
மீன்பிடி ஆர்வலர்கள் சென்ற படகு கவிழ்ந்ததில் பெண் பலி; மூவர் மாயம்
Published on 08/12/2024 02:50
News

ரவூப், பகாங்  கோம்பாக், சிலாங்கூரில் இருந்து மீன்பிடி ஆர்வலர்கள் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற படகு இன்று காலை கெமாமன் கடற்பரப்பில் விசைப்படகில் மோதியதில் ஒரு பெண் நீரில் மூழ்கி மேலும் மூவரைக் காணவில்லை. காலை 6.30 மணியளவில் கோல கெமாமனில் இருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கெமாமன் மாவட்ட காவல்துறை தலைவர் ஹன்யன் ரம்லான் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது மீன்பிடி படகில் ஒரு கேப்டன், பணியாளர்கள் மற்றும் 23 முதல் 79 வயதுடைய ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் இருந்ததாக ஹன்யன் பெர்னாமாவிடம் கூறினார். காணாமல் போனவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். மற்றவர்கள் உயிர் தப்பினர். விசைப்படகில் மோதியதால் மீன்பிடி படகு கவிழ்ந்தது.தேடும் பணி இன்னும் தொடர்வதாகவும அவர் கூறினார். போலீசார் இன்னும் காணாமல் போனவர்களை அடையாளம் கண்டு வருவதாகவும், தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Comments