Offline
Menu
மலேசியர்களின் அடிமடியில் கை வைக்கும் அந்நிய நாட்டவர்கள்!
Published on 08/13/2024 02:28
News

அன்னிய நாட்டவர்கள் மலேசியர்களின் பிழைப்பில் மண்ணை வாரிப் போடுவதில் கில்லாடிகளாக இருக்கின்றனர்.

எல்லாத் துறைகளிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டவர்கள் ஆகக் கடைசியாக டாக்சி ஓட்டுநர்களின் அடிமடியில் கை வைத்திருக்கின்றனர்.

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங் பகுதியில் கெரெத்தா சாப்பு எனும் சட்டவிரோத வாடகைக் காரை ஓட்டத் தொடங்கி இருக்கின்றனர் என்று மலேசிய டாக்சி ஓட்டுநர்கள் ஒருங்கிணைப்பு பேரவைத் தலைவர் கமாருடின் ஹுசேன் கூறினார்.

ஏற்கெனவே மிகவும் நலிந்து போயிருக்கும் தங்களது தொழில் அந்நிய நாட்டவர்களின் அடாவடி நடவடிக்கையால் மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது என்று அவர் சாடினார்.

வருமானம் படுவேகமாக பாதித்திருக்கிறது. இவர்களை தடுத்து நிறுத்த யாருமில்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மலேசிய டாக்சியோட்டிகளை காப்பாற்றுங்கள் என்று கமாருடின் கேட்டுக் கொண்டார்.

Comments