Offline
Menu
தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட முதியவர் கைது
Published on 08/13/2024 02:29
News

ஈப்போ: கோல கங்சார் மாவட்டத்தில் உள்ள கட்டடத்தில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிடப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் முதியவர் கைது செய்யப்பட்டார்.  கங்சார் டெடாப் டி ஹதி என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளித்த ஒருவரால் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைத் தலைவர் ஹெய்ஷாம் ஹருன் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவுவதற்காக 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் இன்று இரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். இம்மாதம் தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து ஒவ்வொரு கொடியை நிறுவும் போதும் பொதுமக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் கவனமாகவும் இருக்குமாறு ஹெய்ஷாம் அறிவுறுத்தினார்.

 

Comments