ஜாலான் டூத்தா சுங்கச்சாவடி அருகே இன்று ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து வாகனம் தீப்பிடித்து எரிந்ததில் 30 வயதான லாரி டிரைவர் காயமடைந்தார். கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையானது, நண்பகல் வேளையில் தமக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு இயந்திரம் மற்றும் தண்ணீர் டேங்கர் ஒன்றை அனுப்பியதாகவும் தெரிவித்தனர்.
ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்தவுடன், தீயணைப்பு வீரர்கள் ஒரு லோரியின் பகுதி எரிந்திருப்பதை பார்த்து தீயை அணைத்தனர். தலை மற்றும் கைகளில் காயம் அடைந்த ஓட்டுனர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கவிழ்ந்த லோரியில் இருந்து கசிந்த டீசல் காரணமாக விபத்து பகுதியை கடந்து செல்லும் போது வாகனங்கள் பகுதியளவு தீப்பிடித்து எரிவதைக் காட்டும் சம்பவத்தின் வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.