Offline
Menu
மண்வாரி மீது கார் மோதியது: கல்லூரி மாணவி, ஓட்டுநர் மரணம்- ஐவர் காயம்
Published on 08/14/2024 16:33
News

போர்ட்டிக்சன், கம்போங் கெலாம் அருகில் சாலை சிக்னல் விளக்குப் பகுதியில் வாகனம் ஒன்று மண்வாரி கனரக வாகனத்துடன் மோதியதில் 24 வயது வாகனமோட்டியும் 18 வயது கல்லூரி மாணவியும் உயிரிழந்தனர். மேலும் ஐவர் காயமுற்றனர்.

காயமுற்றவர்களில் 37 வயது ஆடவர், 17 வயது இளைஞர், 16 வயது மாணவன், 19 வயது கல்லூரி மாணவி, 18 வயது கல்லூரி மாணவி அடங்குவர் என்று போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் அய்டி ஷாம் முஹமட் ஓர் அறிக்கையில் கூறினார்.

அனைவரும் இந்தியர்கள் என்ற அவர், விபத்தில் இறந்தவர்கள், காயமுற்றவர்கள் பெயர்களை வெளியிடவில்லை.

பின்னிரவு 1.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிரம்பானில் இருந்து போர்ட்டிக்சன் நோக்கி வந்துக்கொண்டிருந்த போது நிலத்தடியில் கேபள் பதிப்பதற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த மண்வாரி மீது மோதியது என்று அவர் சொன்னார்.

இப்பணி நடந்துக்கொண்டிருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த கூம்பு மீது மோதுவதை தவிர்க்க முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து அக்கா ர் மண்வாரி மீது மோதியது என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது என்றும் அய்டி குறிப்பிட்டார்.

Comments