Offline
Menu
விளையாட்டு துப்பாக்கியை காட்டி 2 நகைக் கடைகளில் கொள்ளை; பெண் கைவரிசை
Published on 08/24/2024 18:46
News

கோலாலம்பூர்:

ஒரு பெண் உட்பட இருவர் அலோர் காஜாவில் உள்ள ஒரு நகைக் கடையில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி தங்க காப்பை கொள்ளையடித்தனர்.

அதே சமயத்தில் இன்னொரு நகைக் கடையிலும் இவ்விருவரும் கைவரிசையை காட்டி இருக்கின்றனர் என்று அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டென்டன்ட் அஷாரி அபு சமா Ashari Abu Sama கூறினார்.

பூலாவ் செபாங்கில் அண்மையில் நிகழ்ந்த 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகை கொள்ளைச் சம்பவத்திலும் இதே பெண்மணி சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

வாடிக்கையாளர் போல் கடைக்கு வந்து நகைகளை காட்டச் சொல்லி விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி அப்பெண் நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பிவிடுவாள் என்று கூறிய அஷாரி அவள் 30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதிலானவள் என்றார்.

Comments