Offline
போலி அடையாள அட்டை: 4 மாத கைக் குழந்தையின் தாய்க்கு அபராதம்
Published on 08/24/2024 18:51
News

கோலாலம்பூர்:

அடுத்தவரின் அடையாளக் கார்டை பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 39 வயது ஆர்.அய்ஷாவுக்கு R.Aishah ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் எஸ்.புனிதா முன்னிலையில் மொழிபெயர்ப்பாளர் குற்றப்பத்திரிகையை வாசிக்க தனக்கு எதிரான குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக்கொண்டார். கடந்த மே மாதம் அவர் இக்குற்ற செயலைப்புரிந்தார்.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் அய்ஷா இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அய்ஷாவுக்கு குழந்தை பிறந்து இப்போதுதான் நான்கு மாதங்களாகின்றன

2024, மே 6 ஆம் தேதி பின்னிரவு 2.30 மணியளவில் ஈப்போ ராஜா பெர்மைசூரி மருத்துவமனை பிரசவ வார்டில் 38 வயது மற்றொரு பெண்ணின் மைகார்டை பயன்படுத்தியதாக அய்ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது

Comments