Offline
10 மீட்டர் ஆழமிக்க குழியில் இந்திய நாட்டு பெண் சுற்றுப்பயணி புதையுண்டாரா?
Published on 08/24/2024 19:01
News

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் திடீரென மண் சுமார் 10 மீட்டர் ஆழத்திற்கு புதைந்ததில் ஒரு பெண் அதில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இந்தியாவில் இருந்து சுற்றுப்பயணியாக வந்த ஒரு பெண் அக்குழியில் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

கோலாம்பூருக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அப்பெண் தன்னுடைய குடும்பத்தாருடன் இன்று தாயகம் திரும்புவதாக இருந்தார் என்று கூறப்பட்டது.

காலை 11.30 மணியளவில் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கள ஆயவில் அப்பெண்ணை தேடி மீட்பதில் தீயணைப்பு, மீட்பு இலாகா அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையக துணைத் தலைவர் சூப்பிரிண்டன்டன்ட் நுஸுலான் மாட் டின் Nuzulan Md Din அவர் தம் படையினருடன் அங்கு விரைந்தார்.

 

Comments