Offline
வேலை மோசடி: 14 வயது ஆப்பரேட்டர் சிறுவனுக்கு மாதம் 3,500 ரிங்கிட் சம்பளம்
News
Published on 08/24/2024

வேலை மோசடி கும்பலுடன் தொடர்புள்ள சிறுவர்களின் சம்பளம் கேட்போரை வாயைப்பிளக்க வைக்கிறது. ஒருவனுக்கு வயது 14, மற்றொருவனுக்கு வயது 16. இவர்கள் இருவரும் மாதம் ஒன்றுக்கு தலா 3,500 சம்பளம் வாங்கின்றனர். இவர்களில் ஒருவர் ஆண். மற்றொருவர் பெண். பட்டதாரிகளுக்கு கூட இவ்வளவு சம்பளம் இல்லை.

இவ்வளவு பெரிய சம்பளம் வாங்கும் அளவுக்கு அப்படி என்னதான் வேலை செய்கின்றனர்?

வேலை மோசடியில் ஈடுபட்டிருக்கும் கும்பலுக்கு டெலிபோன் ஆப்பரேட்டராகவும் தரவு நிர்வகிப்பாளர்களாவும் செயல்பட்டனர் என்று புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலன் விசாரணை இலாகா இயக்குனர் டத்தோஸ்ரீ முஹமட் யூசோப் Datuk Seri Ramli Mohamed Yoosuf கூறினார்.

சுங்கை பீதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சீனாவை சேர்ந்த 5 ஆனவர்கள் உட்பட இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அதுபோது இந்த இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது என்று ரம்லி சொன்னார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 14 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்ற அவர் 18 கைத்தொலைபேசிகள், 4 மடிகணினிகள், பேசுவதற்கான படிவம், ஒரு ரவுட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

 

Comments