Offline
சிறையி்ல் 731 நாட்கள், நீதி எங்கே? – நஜிப் கேள்வி
News
Published on 08/24/2024

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சிறை வாசம் தொடங்கி இன்றோடு 731 நாட்கள் ஆகின்றன. அதாவது கிட்டத்தட்ட 2 ஆண்டுகள்.

எஸ் ஆர் சி இன்டர்நேஷனல் நிறவனத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம், நம்பிக்கை மோசடி, சட்டவிரோத பண பரிவர்த்தனை ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் நஜிப்பிற்கு விதிக்கப்பட்டது.

அது பின்னர் அரச மன்னிப்பு நடைமுறையின் கீழ் சிறை தண்டனையும் அபராதத் தொகையும் பாதியாக குறைக்கப்பட்டது.

நீதி, வாக்குறுதிகள், தரப்பட்ட நம்பிக்கை, அனுதாபம் அனைத்தும் என்னவாகின என்று தமது ஃபேஸ்புக் பதிவில் நஜிப் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நல்ல பதிலுக்கு காத்திருந்து கண்கள் பூத்து விட்டன. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி 731 நாட்கள் கடந்து விட்டன என்று அவர் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

Comments