Offline
பெண்களின் கார்களில் மனைவியை தேடிய ஆசாமி
Published on 08/24/2024 19:12
News

பெண் காரோட்டிகளை பின் தொடர்ந்து சென்று கண்ணாடி வழியாக பார்த்து தொந்தரவு செய்து வந்த அந்நிய நாட்டு நபரை போலீஸ் கைது செய்தது.

ஜோகூர் பாருவில் ஸ்தூலாங் பாரு Stulang Baru பகுதியில் இந்த 35 வயது ஆசாமி சிவப்பு நிற புரோட்டோன் வீரா ரக காரில் பெண்கள் ஓட்டிவரும் கார்களை பின் தொடர்ந்து வந்து

காரை நிறுத்தி கண்ணாடி வழியாக உள்ளே இருப்பவர்களை நோட்டமிடுவார் என்று ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலாமாட் Raub Selamat கூறினார்.

இது பற்றிய ஒரு காணொளி சமுக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து போலீஸும் ஒரு புகாரைப் பெற்றது.

ரோந்து போலீசார் அந்நபரை கைது செய்து ஸ்தூலாங் பாரு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் வீட்டில் இருந்து வெளியேறிய மனைவியை தேடிக் கொண்டிருப்பதாக கூறிய அந்நபரை இன்று தொடங்கி 14 நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவைப் பெற்றிருப்பதாக அவர் சொன்னார்.

Comments