Offline
ஆகஸ்ட் 29 முதல் மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும்
Published on 08/24/2024 19:14
News

கோலாலம்பூர்:

வரும் ஆகஸ்ட்29-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை (STR) வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இம்முறை 8 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த உதவித் தொகையைப் பெறவுள்ளனர்.

அதேநேரம் உதவித் தொகையைப் பெறத் தவறி மறுவிண்ணப்பம் செய்தவர்களும் புதியதாக விண்ணப்பம் செய்பவர்களும் மூன்றாம் கட்ட ரஹ்மா உதவித் தொகையை அடுத்த மாதம் செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் பெறுவர் என்று அது தெரிவித்துள்ளது.

இந்த உதவித் தொகையானது பெறுனர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். அதேநேரம் பொதுமக்கள் BSN வங்கிகளிலும் இந்த உதவித் தொகையை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பெறுநரும் அவரவர் வகைக்கேற்ப ரும்650 வரை இந்த பண உதவியை பெறுவர் என்றும் நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

 

Comments