ஈப்போ:
கம்போங் உலு சிலிமிலுள்ள Risda Eco Park இல் தண்ணீர் திடீரென பெருக்கெடுத்து ஓடிய சம்பவத்தைத் தொடர்ந்து, சிக்கித் தவித்த 19 நபர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பேராக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தெரிவித்துள்ளது.
அங்கு பாலம் இடிந்து விழுந்ததால், தீயணைப்புத் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியவில்லை என்று மாநில ஜேபிபிஎம் உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
இருப்பினும் பொழுதுபோக்கு மையத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள பாலத்தின் எதிர்புறத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது என்றார்.
ஆற்றின் நீர் மட்டம் இன்னும் குறையாமல் இருப்பதாகவும், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
“சம்பவம் நடந்த இடத்திற்கு செல்ல வேறு வழியில்லை. நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நீரோட்டம் வலுவாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
கம்பங் உலு சிலிமில் ஒரு அணை உடைந்ததால் இந்த திடீர் நீர்ப்பெருக்கு ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.