Offline
தாய்லாந்தில் நிலச்சரிவு; 10 பேர் பலி
Published on 08/26/2024 13:01
News

பேங்காக்:

தாய்லாந்தின் புக்கெட்டிலுள்ள பிரபலமான உல்லாசத்தலத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த இருவர், ஒரு தாய்லாந்து நாட்டவர் அடங்குவர் என்றும் ஏனையவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டுக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

“நேற்று அதிகாலை 2 மணி முதல் பெய்யத் தொடங்கிய கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்தன என்றார் அவர்.

மேலும், ஹோட்டல்கள் மற்றும் வாடகைக் குடியிருப்புகள் அமைந்துள்ள தீவின் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள், தன்னார்வலர் குழுக்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் இடையூறு ஏற்படலாம் எனவும் அவர் சொன்னார்.

Comments